Kollywood News

  • Home/
  • Cine News/
  • ’தளபதி 62’ படப்பிடிப்பு தளத்தில் விஜய்யை அசத்திய நபர்கள்!

’தளபதி 62’ படப்பிடிப்பு தளத்தில் விஜய்யை அசத்திய நபர்கள்!



ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அடுத்த படம் ‘தளபதி 62’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார்.

கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றவிருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

சென்னையில் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த குழுவினர் தற்போது கொல்கத்தா பயணம் புரிந்திருக்கிறது. 

கொல்கத்தாவில் 20 நாட்கள் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறதாம். இங்கு ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்படவிருக்கின்றன. பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்கள் ராம், லெக்‌ஷ்மண் என்ற இரட்டையர்கள் இந்தபடத்தில் இணையவுள்ளனர். 

இந்த இரட்டையர்கள் விஜய் நடிக்கும் படத்தில் இணைந்து பணியாற்றுவது இது தான் முதல் முறை. எனவே தங்களுடைய முழுத்திறமையைக்காட்டும் வகையில் சண்டைக்காட்சிகளை எடுத்து வருகின்றனர். ராம் லக்‌ஷ்மண் திறமையைப்பார்த்து விஜய்யே அசந்துபோயிருப்பதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

share