Kollywood News

  • Home/
  • Cine News/
  • சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ வெளியாகும் தேதி அறிவிப்பு!

சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ வெளியாகும் தேதி அறிவிப்பு!



சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘தானா சேர்ந்த கூட்டம்’. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 

சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார். சில தினங்களுக்கு முன் படத்தின் சிங்கிள் வெளியானது. அனைத்து தரப்பினரிடையே நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் இப்படத்தினை வரும் பொங்கல் தினத்தில் வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் டீசரை நவம்பர் மாதமும், டிரெய்லரை டிசம்பர் மாதமும் வெளியிடவுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

share