Kollywood News

  • Home/
  • Cine News/
  • விஜய்யுடன் மீண்டும் இணையும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்

விஜய்யுடன் மீண்டும் இணையும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் கடந்த ஆண்டு தனது 100வது தயாரிப்பு திரைப்படமாக விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்தை பிரமாண்டமாக தயாரித்தது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் விஜய் படத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதாவது விஜய் தற்போது நடித்து கொண்டிருக்கும் 'சர்கார்' படத்தின் உலகளாவிய ரிலீஸ் உரிமையை பெற இந்நிறுவனம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இந்த படத்தின் உரிமைக்காக ரூ.100 கோடி தரவும் இந்நிறுவனம் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

உலகளாவிய ரிலீஸ் உரிமை உள்பட இந்த படத்தின் மொத்த வியாபாரம் சுமார் ரூ.155 கோடியில் இருந்து ரூ.160 கோடி வரை நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இதற்கு முன்னர் இணைந்த 'துப்பாக்கி' மற்றும் 'கத்தி' ஆகிய இரண்டு படங்களும் வசூல் மழை பொழிந்ததால் இந்த படத்தின் வியாபாரம் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More about :

share