அஜித்தின் 'விசுவாசம்' படத்தில் இணைந்த 'தீரன்' பட நடிகர்

அஜித் நடிப்பில் சிவா இயக்கவுள்ள 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருந்தாலும் கோலிவுட் ஸ்டிரைக் காரணமாக படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. ஸ்டிரைக் முடிந்தாவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் 'விசுவாசம்' படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் தேர்வும் ஒருபக்கம் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. இந்த படத்தில் நயன்தாரா, யோகிபாபு, தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி உள்பட ஒருசிலர் நடிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த படத்தில் போஸ் வெங்கட் இணைந்துள்ளார்.

சின்னத்திரை சீர்யல்கள் மூலம் புகழ்பெற்ற இவர் சமீபத்தில் வெளிவந்த 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றார். இந்த நிலையில்தான் அவருக்கு தற்போது 'விசுவாசம்' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

போஸ்வெங்கட் ஏற்கனவே அஜித் நடித்த வீரம்' படத்தில் நடித்த அதுல் குல்கர்னிக்கும், 'என்னை அறிந்தால்' படத்தில் நடித்த 'ஆஷிஷ் வித்யார்த்திக்கும் பின்னணி குரல் கொடுத்தவர் எனப்து குறிப்பிடத்தக்கது. தற்போது முதல்முறையாக அஜித் படத்தில் நடிக்கவிருக்கும் போஸ்வெங்கட், தனக்கு அஜித் படத்தில் நல்ல கேரக்டர் என்றும், அஜித்துடன் முதல்முறையாக நடிக்கவிருப்பது குறித்து எல்லையில்லா மகிழ்ச்சி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Source : Indiaglitz

Read More about :

share