Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஹிந்தியில் ரீமேக்காகும் “தோழா”..நாகர்ஜூனா இடத்தில் அமிதாப்பச்சன்.!!

ஹிந்தியில் ரீமேக்காகும் “தோழா”..நாகர்ஜூனா இடத்தில் அமிதாப்பச்சன்.!!


வம்சி இயக்கத்தில் கார்த்தி மற்றும் நாகர்ஜூனா நடிப்பில் வெளிவந்தது “தோழா”. நாயகியாக தமன்னா நடித்திருந்தார். பிவிபி சினிமா நிறுவனம் தயாரித்திருந்தது. பிரெஞ்சு படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதனை ஹிந்தியில் ரீமேக் பண்ணவிருக்கிறார் பிரபல இயக்குனர் கரண் ஜோஹர். அதற்கான முதற்கட்ட வேலைகளில் இறங்கியுள்ளனர் படக்குழுவினர்   

கடைசியாக வந்த தகவலின்படி நாகர்ஜூனா ரோலில் அமிதாப்பச்சனும், கார்த்தி ரோலில் வருண் தவானும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது...

share