Kollywood News

  • Home/
  • Cine News/
  • சேரனின் திருமணம் படத்தில் பாடல் இன்று வெளியீடு

சேரனின் திருமணம் படத்தில் பாடல் இன்று வெளியீடு

நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்குனர் சேரன் இயக்கும்  திரைப்படம் திருமணம். இந்த திரைப்படத்தில் உமாபதி ராமைய்யா  , சேரன், சுகன்யா, தம்பி ராமைய்யா, அனுபமா குமார் ஆகியோர் இனைந்து நடித்துள்ளனர்.


இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. சேரன் நம் அனைவர்க்கும் பிடித்த இயக்குனர் எதார்த்தமான சமூக படங்களை தனக்கே உரித்தான எழுத்துக்களால் கவரக்கூடிய இயக்குனர். அவர் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் படம் இயக்கி 4 நிமிடங்களுக்கு படத்தின் ட்ரைலரை வெளியிட்டிருந்தார் அந்த அளவிற்கு படத்தில் விஷயங்கள் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்கின்றனர். அந்த படத்தின் "வராமலே வந்தாயே" என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு இணையத்தில் வெளியாகிறது என்று படக்குழு தெரிவித்துள்ளது.

Read More about :

share