Kollywood News

  • Home/
  • Cine News/
  • பிப்ரவரி 21 முதல் டூலெட்

பிப்ரவரி 21 முதல் டூலெட்

                           தமிழ் சினிமாவின் விருதுகளை அறுவடை செய்யும் படங்கள் மக்கள் மனதிலும் ஆழமாக பதிந்து விடும். அத்தகைய படைப்பாக வெளிவர இருக்கும் படம் டூலெட். ஒரு நடுத்தர குடும்பத்தில் ஒருவன் வாடகைக்கு வீடு கிடைக்காமல் படும் அவஸ்த்தையின்  கதையே டூலெட். கவிஞரின் மகனாகவும் சினிமாவில் துணை ஒளிப்பதிவாளராகவும் படத்தில் மிகவும் சிறப்பாக தன் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் சந்தோஷ் நம்பிராஜன். அவருக்கு மனைவியாக ஷீலா ராஜ்குமார் தன் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் அவர் நாடக நடிகராகவும் பரதநாட்டிய கலைஞராகவும் பணியாற்றிவருகிறார். இந்த படம் 100கும் மேற்பட்ட விழாக்களுக்கு அனுப்பப்பட்டு 84 விழாக்களில் படம் தேர்வு செய்யப்பட்டு 32 விருதுகளை வென்றுள்ளது. இந்த படம் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் என்றும் வல்லுநர்கள் கூறிவருகின்றனர்

Read More about :

share