Kollywood News

  • Home/
  • Cine News/
  • என்றும் பதினாறு! : தேவதை த்ரிஷா

என்றும் பதினாறு! : தேவதை த்ரிஷா

16 வருடங்களாக என்றும் 16கவே இருக்கும் த்ரிஷாவின் திரைவாழ்க்கையை

பார்ப்போம்

நடிகை த்ரிஷா விஜய் சேதுபதியுடன் நடித்திருக்கும் 96 திரைப்பட டீசர் வெளியானதும் த்ரிஷாவா இது என ரசிகர்கள் வாயைப் பிளந்தனர். த்ரிஷாவின் இளமை ததும்பும் அழகும் அந்த காந்தப்பார்வையும் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

இப்போது அவரின் நீண்ட நாள் ஆசையான ரஜினியுடன் நடிப்பது நிறைவேறியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ரஜினி படத்தில் த்ரிஷா ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்திய திரையுலகில் இருக்கும் பல முக்கிய கதாநாயகர்களுடன் நடித்த ஒரு சில நடிகைகளில் த்ரிஷாவும் ஒருவர்.

சினிமா என்ட்ரி:

மிஸ் சென்னை பட்டம் வென்ற பிறகு ஜோடி திரைப்படத்தில் முதன்முதலில் அறிமுகமானார் த்ரிஷா. அதன்பிறகு சூர்யாவுடன் மௌனம் பேசியதே திரைப்படம் கவனம் பெற்றது. பிறகு சூர்யாவுடன் ஆறு திரைப்படத்தில் நடித்திருந்தார்.

சாமி திரைப்படத்தில் விக்ரமுடன் இணைந்தார். இப்படம் அவரின் வாழ்க்கையில் மிக பெரிய திருப்புமுனையாக இருந்தது. பிறகு பீமா திரைப்படத்திலும் விக்ரமுடன் இணைந்தார்.

கில்லி திரைப்படத்தில் விஜய்யுடன் நடித்த நடிப்பு மிகவும் பேசப்பட்டது. அதன்பிறகு திருப்பாச்சி, ஆதி, குருவி என விஜய்யுடன் ஒரு ரவுண்ட் அடித்தார் த்ரிஷா.

அஜித்துடன் ஜி படத்தில் நடித்தார் த்ரிஷா. பிறகு கிரீடம் திரைப்படம் த்ரிஷாவுக்கு கிரீடம் வைக்கும் அளவுக்கு பேசப்பட்டது. பிறகு மங்காத்தா என்னை அறிந்தால் போன்ற படங்களில் இணைந்து ரசிகர்களை உச்சிக்குளிர செய்தார்.

சிம்புவுடன் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷாவின் அழகை ஆராதித்த கௌதம் மேனனுக்கு ரசிகர்கள் நன்றிக்கடன் பட்டார்கள்.

உலகநாயகனையும் நான் விட்டு வைக்க மாட்டேன் என மன்மதன் அம்பு மற்றும் தூங்காவனம் திரைப்படங்களில் நடித்தார். லேசா லேசா திரைப்படத்திற்கு பிறகு மாதவனுடன் இணைந்த படம் மன்மதன் அம்பு ஆகும்.

தனுஷுடன் கொடிஇதேபோல் ஜீவா, விஷால், ஜெயம் ரவி, ஆர்யா, மாதவன், சித்தார்த் என பலருடனும் நடித்துள்ளார்.

மலையாளத்தில் நிவின் பாலியுடன் "ஹேய் ஜூட்", கன்னடத்தில் புனித்ராஜ்குமாருடன் "பவர்", இந்தியில் அக்ஷய் குமாருடன் "கட்டா மீத்தா", தெலுங்கில் பிரபாஸுடன் "வர்ஷம்" "பௌர்ணமி" "புஜ்ஜிகாடு" மகேஷ்பாபுவுடன் "ஆத்தடு", "சைனிக்குடு", ஜூனியர் என்டிஆருடன் "தம்மு" சிரஞ்சீவியுடன் "ஸ்டாலின்" என கலக்கியுள்ளார். இப்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடனும் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டார்.

தேவதை த்ரிஷா என்றும் பதினாறாக இருந்து ஜொலிக்கவேண்டும்...!

Read More about :

share