Kollywood News

  • Home/
  • Cine News/
  • ராஜமௌலியின் RRR படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் ஹீரோக்கள்:

ராஜமௌலியின் RRR படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் ஹீரோக்கள்:

இயக்குனர் ராஜமௌலி 'பாகுபலி' படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து 'ஆர்ஆர்ஆர்' படத்தை இயக்கி வருகிறார். இதில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிக்கின்றனர். ஹீரோயினாக பாலிவுட் நடிகை ஆலியா பட் நடிக்கிறார். மேலும் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் சமுத்திரக்கனி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக நாம் ஏற்கனவே செய்தியாக பாத்தோம்.

இந்நிலையில் தற்போது மேலும் இரண்டு முன்னணி பாலிவுட் நடிகர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர் என தகவல் கசிந்துள்ளது. சஞ்சய் தத் மற்றும் வருண் தவான் இருவரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர் என கூறப்படுகிறது.

படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு அறிவிக்கவில்லை எனவே அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்.

share