40 நாட்கள் இரவில் மட்டுமே படமாக்கப்பட்ட ‘உரு’!


‘வையம் மீடியா’ நிறுவனம் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் விக்கி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘உரு’. கலையரசன், தன்ஷிகா, மைம் கோபி, உட்பட பலர் நடித்திருக்கும் இப்படம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது.

இயக்குநர் விக்கி ஆனந்த் படத்தினை பற்றி பேசிய போது, “’உரு’ சைக்காலஜிக்கல் த்ரில்லர் கதையாக உருவாகியுள்ளது. இது, உரு தெரியாத ஒரு மனிதன் பற்றிய படம். இந்த படத்தை முழுக்க கொடைக்கானலில் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் கடும் குளிர் நேரத்தில் 40 நாட்கள் இரவில் இப்படத்தின் காட்சிகளை படமாக்கியுள்ளோம். அது சவாலான விஷயமாக இருந்தது.

இந்த படத்தில் நடித்தவர்கள் பணியாற்றியவர்கள் என அனைவரும் ரொம்பவும் கஷ்டப்பட்டோம். அந்த கஷ்டம் எல்லாம் மறந்து போகும் விதமாக ‘உரு’ நல்ல ஒரு படமாக வந்துள்ளது’’ என்றார். 

இப்படத்திற்கு ‘மெட்ரோ’ படத்திற்கு இசை அமைத்த ஜோஹன் இசை அமைத்துள்ளார். ‘பிச்சைக்காரன்’ பட ஒளிப்பதிவாளர் பிரசன்னா ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை இயக்கத்தை ஆண்டனி கவனித்துள்ளார்.

share