Kollywood News

  • Home/
  • Cine News/
  • வடசென்னை’ படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்

வடசென்னை’ படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘வடசென்னை’. ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், ராதாரவி, சீனு மோகன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்ஷன்ஸ் வெளியிடுகிறது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

மூன்று பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம், வருகிற 17-ம் தேதி உலகம் முழுக்க வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், சில காட்சிகளை நீக்கினால் ‘யு/ஏ’ சான்றிதழ் தருவதாகக் கூறியுள்ளனர்.

ஆனால், படத்தில் உண்மைத்தன்மை இருக்க வேண்டும் என்பதால் சம்பந்தப்பட்ட காட்சிகளை வெற்றிமாறன் மற்றும் தனுஷ் இருவரும் நீக்க மறுக்க, ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது சென்சார் போர்டு. எனவே, 18 வயதுக்கு கீழுள்ளவர்கள் இந்தப் படத்தைப் பார்க்க முடியாது. மேலும், தொலைக்காட்சியில் இந்தப் படத்தை ஒளிபரப்ப வேண்டுமானால், மறுபடியும் தணிக்கைக்கு அனுப்பி ‘யு’ சான்றிதழ் பெற வேண்டும்.

share