Kollywood News

  • Home/
  • Cine News/
  • ”வட சென்னை”யில் வில்லனாக அவதாரம் எடுக்கும் விஜய் சேதுபதி...???

”வட சென்னை”யில் வில்லனாக அவதாரம் எடுக்கும் விஜய் சேதுபதி...???



விசாரணை படத்திற்கு பிறகு தற்போது தனுஷை வைத்து வட சென்னை படத்தினை இயக்கவுள்ளார் இயக்குனர் வெற்றி மாறன். இவர் பல வருடங்களாக எடுக்க நினைத்த கனவு படம்.

இதற்காக வட சென்னையை அப்படியே ஒரு பிரம்மாண்ட செட் அமைத்து உருவாக்கியுள்ளனர் படக்குழுவினர். இந்த படத்தில் வில்லனின் கதாபாத்திரம் மிகவும் முக்கியமான ரோல் என்பதால் ஒரு பெரிய நடிகரை அதில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்றது.

அந்த கதாபாத்திரத்திற்கு விஜய் சேதுபதி தான் பொருத்தமாக இருப்பார் என முடிவெடுத்து அவரை அனுகியுள்ளனர் படக்குழுவினர். முழுக்கதையையும் கேட்ட விஜய் சேதுபதி ஓரிரு நாட்களில் தனது முடிவை அறிவிப்பதாக கூறியுள்ளாராம்.

விஜய் சேதுபதியும் இந்த படத்தில் இணைவதால் படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

share