Kollywood News

  • Home/
  • Cine News/
  • படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஆவேசகமாக பேசிய கவிஞர் வைரமுத்து:

படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஆவேசகமாக பேசிய கவிஞர் வைரமுத்து:

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிக்கிய குற்றவாளிகளை பற்றி கவிஞர் வைரமுத்து நெடுநல்வாடை படத்தின் வெற்றி விழாவில் ஆவேசகமாக பேசினார்: 

பொள்ளாச்சி சம்பவம் குறித்து ஆட்சி உலகமும், சமூகமும் தவிக்கிற தவிப்பை நீங்கள் பார்க்கிறீர்கள். ஒரு பெண்ணின் கதறல் அரத்தூக்கத்தை கெடுக்கிறது. பொள்ளாச்சியில் மட்டும் தான் இப்படியான துயரம் நடக்கிறதா? இதற்கான அடிப்படை காரணம் ஒன்று உண்டு. மனிதன் இயல்பாகவே மிருகத்தின் குழந்தை. அந்த மிருகங்களை சரிப்படுத்த தான் கலை. அந்தக்கலையால் பண்படாத பைத்தியங்கள் தான் இப்படியான செயலை செய்திருக்கிறார்கள்.

இந்த மனநோய்களை தயாரிப்பதில் இந்த சமூகத்துக்குரிய பங்கு என்ன? நடுத்தெருவில் நிறுத்தி தோல் உரியுங்கள் என்று சிலர் சொல்கிறார்கள். அதைவிட அவர்களின் மனதில் இருக்கும் மிருகத்தோலை உரிக்கவேண்டும். அதைத்தான் கலை செய்கிறது. இதைத் தான் நெடுநல்வாடை செய்தது. ஒன்று சொல்லட்டுமா? இந்தப்படம் சிறந்தபடம் என்று தெரியும்.

share