Kollywood News

  • Home/
  • Cine News/
  • திரையுலகில் எனக்கு தனி மரியாதை : வரலட்சுமி

திரையுலகில் எனக்கு தனி மரியாதை : வரலட்சுமி

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், ராஜ்கிரண், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி நடித்துள்ள படம், சண்டக்கோழி 2. இப்படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் வரலட்சுமி கூறியதாவது: சண்டக்கோழி 2ம் பாகம் என் கேரியரில் மிக முக்கியமான படம். எதிர்மறை குணாதிசயங்கள் நிறைந்த பெண்ணாக நடித்துள்ளேன். இப்போது மீ டூ மூலம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வை, ஒரு வருடத்துக்கு முன்பே, சேவ் சக்தி இயக்கத்தின் மூலம் நான் தொடங்கி விட்டேன். எனக்கு யாரை பார்த்தும் பயம் இல்லை. எதுவாக இருந்தாலும் என் கருத்துகளை துணிச்சலாக சொல்வேன்.

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அதற்குரிய பலனை அடைந்தே தீர வேண்டும். அரபு நாடுகள் போல் தண்டனை முறை கொண்டு வந்தால், பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் குறையும். எனது துணிச்சலான பேச்சு மற்றும் கருத்துகளால் திரையுலகில் எனக்கு தனி மரியாதையும், என்னை கண்டால் ஒருவித பயமும் உருவாகி இருப்பதை உணர்கிறேன். இது என் நேர்மைக்கு கிடைத்த வெகுமானம்.

share