Kollywood News

  • Home/
  • Cine News/
  • வர்மா மீண்டும் உருவாகும்

வர்மா மீண்டும் உருவாகும்

விக்ரமின் மகன் துர்வ் நடிக்கும் படம் "வர்மா". தெலுங்கில் விஜய் தேவரக்கொண்டா நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் "அர்ஜுன் ரெட்டி"அந்த படத்தை தமிழில் விக்ரம் மகனின் அறிமுக படமாக உருவாகிக்கொண்டு இருந்தது. இதில் சிறப்பம்சம் இந்த படத்தை பாலா இயக்குகிறார் என்ற தகவலே. ஆனால் தற்போது ரிலீசுக்கு கொஞ்ச நாட்களே இருக்கும் என்று கருதிய நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக பாலா இந்த படத்தை விட்டு விலகுகிறார் என்றும் மீண்டும் வர்மா முதலில் இருந்து படமாக்கபடும் என்றும் அறிவிப்பு வந்திருந்தது. இந்த தகவலை  கேட்டு கோலிவுட் வட்டாரங்களும் தமிழ் சினிமா ரசிகர்களும் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். விக்ரம் அவர்களும் இயக்குனர் பாலா அவர்களும் இனைந்து சேது, காசி, பிதாமகன் போன்ற காலத்தால் அழியாத திரைப்படங்களை தந்தது குறிப்பிடத்தக்கது.  

Read More about :

share