Kollywood News

  • Home/
  • Cine News/
  • ’வீரா’வை மிரள வைக்கும் பின்னணி இசை!

’வீரா’வை மிரள வைக்கும் பின்னணி இசை!



அறிமுக இயக்குனர் ராஜாரமன் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘வீரா’. கிருஷ்ணா மற்றும் ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ள இப்படத்தில் கருணாகரன், தம்பி ராமையா, மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, ராதாரவி மற்றும் நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தை, ஆர்.எஸ்.இன்போடைன்மெண்ட்' நிறுவனம் தயாரித்துள்ளது. ஆக்‌ஷன் - காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 

இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் லியோன் ஜேம்ஸ். பின்னணி இசையமைத்திருக்கிறார் எஸ். என். பிரசாத். 

படத்தின் டீசர் மற்றும் முன்னோட்டத்தில் பின்னப்பட்ட பின்னணி இசை அனைவராலும் கவரப்பட்டது. ஆக்‌ஷன் காட்சிக்கு பிரத்யேக இசையமைத்து ரசிகர்கள் அனைவராலும் வெகுவாக எதிர்பார்க்கப்படும் படங்களின் வரிசையில் முன்னனியில் வந்து நிற்கிறது வீரா.


share