Kollywood News

  • Home/
  • Cine News/
  • விக்னேஷ் சிவன் கனவு நனவாகிவிட்டது

விக்னேஷ் சிவன் கனவு நனவாகிவிட்டது

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'என்.ஜி.கே' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்திற்காக யுவன் இசையில் விக்னேஷ் சிவன் ஒரு பாடலை எழுதியுள்ளார். இந்த பாடல் சிங்கிள் பாடலாக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'இயக்குனர் செல்வராகவனுடன் பணிபுரிய வேண்டும் என்ற எனது கனவு நனவாகிவிட்டது. மேலும் இசையமைப்பாளர் யுவன், சூர்யா மற்றும் தயாரிப்பாளர் பிரபு ஆகியோர்களுடன் பணிபுரிந்தது பெருமை

சூர்யாவின் அன்பான ரசிகர்களுக்கு மிக விரைவில் ஒரு நல்ல பாடல் காத்திருக்கின்றது என்பது 'என்.ஜி.கே' அப்டேட்டாக கூறுகிறேன்' என்று விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.

Read More about :

share