உலகம் முழுவதும் நேற்று நண்பர்கள் தினம் அனுசரிக்கப்பட்டது. சமூக வலைத்தளங்கள் மூலமும், நேரிலும் பலர் நண்பர்கள் தின வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். மேலும் தங்களுடைய நெருங்கிய நண்பர்கள் குறித்து பல திரையுலக பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில்,
தன் காதலி நயன்தாராவுக்கு இன்ஸ்டாகிராமில்
நண்பர்கள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்
இயக்குநர் விக்னேஷ் சிவன்
நயன்தாரா குறித்து
கூறியதாவது: இந்த காதலில் அளவுக்கதிகமான நட்பு இருக்கின்றது. அதேபோல் எங்கள் நட்பிலும்
ஏராளமான காதல் இருந்து கொண்டிருக்கின்றது' என்று கூறி நயன்தாராவுடன் அவர் நெருக்கமாக
இருக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.