Kollywood News

  • Home/
  • Cine News/
  • தொடர்ந்து கொண்டே இருக்கும் அனிருத், விக்னேஷ் சிவன் கூட்டணி..!!

தொடர்ந்து கொண்டே இருக்கும் அனிருத், விக்னேஷ் சிவன் கூட்டணி..!!



போடா பாடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். தனது முதல் படத்திலேயே மூன்று பாடல்கள் எழுதி தன்னை ஒரு பாடலாசிரியராகவும் அறிமுகபடுத்திக் கொண்டவர் விக்னேஷ் சிவன்.

தொடர்ந்து வணக்கம் சென்னை படத்திலும் பாடல்கள் எழுதி இசையமைப்பாளர் அனிருத்துடன் கூட்டணி அமைத்துக் கொண்டார் இவர். அன்று ஆரம்பித்த கூட்டணி தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் “ரெமோ” படம் வரையிலும் தொடர்கிறது. வரும் ஜூன் மாதம் 9 ஆம் தேதி ரெமோ படத்தின் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் தீம் மியூசிக் பாடல் ஒன்றும் வெளியாக இருக்கிறது.

இந்த தீம் மியூசிக் பாடலை எழுதியுள்ளவர் விக்னேஷ் சிவன் தான். நானும் ரெளடிதான் படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதியவரும் விக்னேஷ் சிவன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

share