Kollywood News

விஜய் 63 அப்டேட்

               தளபதி விஜயின் 63 வது படத்தை அவரது வெற்றி இயக்குனரான அட்லீ இயக்குகிறார். இதில் விஜயுடன் இணைந்து நயன்தாரா, யோகி பாபு, விவேக், ஆனந்த் ராஜ், டேனியல் பாலாஜி ஆகியோர் நடிக்கின்றார்கள். இந்த படத்திற்கு ஓளிப்பதிவாளராக மெர்சல் படத்தை படமாக்கிய G.K. விஷ்ணு பணிபுரிகிறார். இசை A.R.ரஹ்மான் அவர்களின் கைவண்ணத்தில் சிறப்பாக வந்திருக்கிறது என்றும் படக்குழு தெரிவித்ததோடு நேற்று படத்தின் முதல் பாடலை படமாக்கி முடித்துவிட்டனர் என்ற செய்தி வந்துள்ளது. ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெரும் பாடலாக அமையும் என்பது படக்குழுவினரின் கருத்தாக கூறப்படுகிறது. இந்த படத்தை அன்டோனி L. ரூபன் அவர்கள் படதொகுப்பு செய்கிறார்கள். மேலும் இந்த திரைப்படம் AGS என்டர்டைன்மெண்ட் ஆல் தயாரிக்க படுகிறது.  

Read More about :

share