விஜய்யை வேற லெவலுக்கு எடுத்துச் செல்ல போகிறேன் - ஏ ஆர் முருகதாஸ்...அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளிவரவுள்ள படம் 'மெர்சல்'. இதனை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இணையவுள்ளார் என்பது நாம் ஏற்கனவே அறிந்த செய்தி. 

இந்நிலையில் இது குறித்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அண்மையில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, "இந்த படம் எமோஷ்னல் கலந்த ஒரு மாஸ் ஆக்க்ஷன் படமாக இருக்கும், விஜய்யை ஒரு வித்தியாசமான பரிமாணத்தில் காட்ட விரும்புகிறேன். அதற்கான தீவிர வேலைகளில் தற்போது இறங்கியுள்ளேன்" என்று கூறியுள்ளார். மேலும் வரும் ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது

share