விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பில் விஜய்யுடன் வரலட்சுமி இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 'சர்கார்' படப்பிடிப்பின்போது விஜய் காதில் கடுக்கண் மற்றும் கையில் குடையுடன் ஸ்டைலாக நின்று கொண்டிருந்த புகைப்படம் ஒன்றை வரலட்சுமி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார்.
நடிகை வரலட்சுமி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் யோகிபாபு வித்தியாசமான கெட்டப்பில் உட்கார்ந்திருக்க அவருடைய கெட்டப்பை ரசித்த விஜய், அவருடைய கன்னத்தை கிள்ளுவது போன்று உள்ளது. மேலும் யோகிபாபுவின் கன்னத்தை கிள்ளுவது யார்? என்ற கேள்வியை வரலட்சுமி எழுப்பியிருந்தாலும் அது விஜய்தான் என்பதை கண்டுபிடிக்க ரசிகர்கள் தவறவில்லை.