Kollywood News

  • Home/
  • Cine News/
  • விஜய்யை அடுத்து சூர்யாவுடன் இணையும் சூப்பர் ஸ்டார்

விஜய்யை அடுத்து சூர்யாவுடன் இணையும் சூப்பர் ஸ்டார்

சூர்யா தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'NGK' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை அடுத்து அவர் பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே

சூர்யா நடிக்கும் படத்தின் ஆரம்பகட்ட பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்ட இயக்குனர் கே.வி.ஆனந்த், இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வில் பிசியாக உள்ளார். இந்த நிலையில் இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சமீபத்தில் மோகன்லால், கே.வி.ஆனந்தை சந்தித்து இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தில் மோகன்லால் வில்லனாக நடிக்கின்றாரா? அல்லது சூர்யாவுக்கு வழிகாட்டும் ஒரு கேரக்டரில் நடிக்கின்றாரா? என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. மோகன்லால் ஏற்கனவே கடந்த 2014ஆம் ஆண்டு தளபதி விஜய்யுடன் ஜில்லா' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் 25ஆம் தேதி தொடங்கவிருப்பதாகவும், அதற்கு முன்னர் இந்த படத்தில் பணிபுரியும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Source : IndiaGlitz

Read More about :

share