எந்த ஒரு தமிழ் படமும் ஏற்படுத்தாத சாதனையை படைத்த ‘மெர்சல்’


விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 

இப்படத்தில் மூன்று விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், எஸ் ஜே சூர்யா, வடிவேலு என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். 

உலகம் முழுவதும் சுமார் 3000 ஸ்கிரீன்களுக்கும் மேலாக இப்படம் வெளியாக இருக்கிறது. 

இந்நிலையில்,  தற்போது இப்படம் ஜப்பானில் Tokyo, Ebina/Kanagawa, Osaka and Nagoya போன்ற இடங்களில் வெளியாக இருக்கிறதாம். இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் அந்த இடங்களில் வெளியானதில்லை என்பது முக்கிய செய்தி. அதுமட்டும் இல்லாமல் ஜப்பானில் வெள்ளிக்கிழமையே வெளியாக போகும் முதல் தமிழ் படமும் இதுதானாம்

share