Kollywood News

  • Home/
  • Cine News/
  • விஜய்யின் மெகா ஹிட் படத்தை தவறவிட்ட அஜித்

விஜய்யின் மெகா ஹிட் படத்தை தவறவிட்ட அஜித்

தமிழ் சினிமாவில் விஜய், அஜித் ஆகியோருக்கு இருக்கும் ரசிகர்கள் பலம் குறித்து நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. ஆனால், ஆரம்பத்தில் இவர்களுக்குள் எந்த ஒரு போட்டியும் இல்லை.

இவர்கள் இருவரும் படங்களை அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பி தான் பார்த்தார்கள், இந்நிலையில் அஜித் எஸ்.ஜே.சூர்யாவை அழைத்து ஒரு கதை சொல்ல சொன்னாராம்.

அப்போது அவருக்கு சொன்ன கதை குஷி தானாம், ஆனால், அஜித்தோ ‘தொடர்ந்து காதல் படங்களில் நடித்து வருகிறேன், அதனால், நெகட்டிவ் கலந்த கதாபாத்திரத்தில் ஏதும் இருந்தால் சொல்லுங்கள்’ என கூறி அதன் பின் உருவானதே வாலி என கொலைக்காரன் படத்தின் இயக்குனர் நம் தளத்தில் பேசும் போது கூறியுள்ளார்.

Read More about :

share