Kollywood News

  • Home/
  • Cine News/
  • வீட்டிற்கு கூட செல்லாமல் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி : விஜய்

வீட்டிற்கு கூட செல்லாமல் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி : விஜய்

கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்தார் இளையதளபதி விஜய். இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் கருணாநிதி காலமானார். அவருக்கு ஒட்டுமொத்த திரையுலகினரும் அஞ்சலி செலுத்திய நிலையில் அமெரிக்காவில் இருந்ததால் விஜயால் அஞ்சலி செலுத்த முடியவில்லை. இருப்பினும் அவரது சார்பில் அவருடைய மனைவி சங்கீதா கருணாநிதி உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில் தளபதி விஜய் அவர்கள் சர்க்கார் படப்பிடிப்பு முடித்துவிட்டு அமெரிக்காவிலிருந்து இன்று அதிகாலை சென்னை வந்தார். தரையிறங்கியதும் விமான நிலையத்திலிருந்து நேராக வீட்டிற்கு கூட செல்லாமல் அதிகாலை 4 மணிக்கே கருணாநிதி அவர்கள் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார் நடிகர் விஜய்.

Read More about :

share