உருவாகிறது முதல்வன் 2; ரஜினி..?? விஜய்..??இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இதுவரை உருவான படங்களில் அர்ஜூன் நடித்த ’முதல்வன்’ மிகவும் முக்கியமான படம். அனைத்து தரப்பினரிடையேயும் இப்படம் அமோக வரவேற்பை பெற்றது. 

இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையை பாகுபலி படத்தின் இயக்குனர் எஸ் எஸ் ராஜமெளலியின் தந்தை கே வி விஜயேந்திர பிரசாத் முதல்வன் 2 படத்தின் கதை உருவாக்கத்தில் ஈடுபட்டிருப்பதை உறுதி செய்துள்ளார். 

முதல்வன் படத்தினை தயாரித்த ஏ எம் ரத்னம் முதல்வன் 2 படத்தின் கதையை உருவாக்க சொன்னதாக விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார். மேலும், இப்படத்தில் ஹீரோவாக நடிக்க ரஜினி மற்றும் விஜய் இருவரிடமும் பேசப்படலாம் என்கிறது கோடம்பாக்கம் செய்திகள்..

share