Kollywood News

  • Home/
  • Cine News/
  • தனி ஒருவனாக தீபாவளிக்கு வருகிறான் தளபதியின் சர்கார்..

தனி ஒருவனாக தீபாவளிக்கு வருகிறான் தளபதியின் சர்கார்..

விஜய்- முருகதாஸ் கூட்டணியில் சர்கார் படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த ஜூன் மாதத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். அப்போது படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

விஜய் படத்தின் இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாக அஜித்தின் விசுவாசம் , சூர்யாவின் என்ஜிகே, விஷாலின் சண்டக்கோழி 2 ஆகிய படங்கள் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தன. ஆனால் அஜித்தின் விசுவாசம் படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அப்படத்தின் இயக்குநர் சிவா 'மணியார் குடும்பம்' இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சண்டக்கோழி 2 படம் அக்டோபர் 18- ம் தேதி வெளிவரும் என தயாரிப்பாளர் சங்க ரிலீஸ் ரெகுலேஷன் கமிட்டி கடிதம் கூறியது.

இந்நிலையில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் என் ஜி கே படத்தின் முதல் போஸ்டரில் தீபாவளி அன்று படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது . அதன் பிறகு வெளியான இரண்டாவது போஸ்டரில் எந்தவித அறிவிப்பும் இடம்பெறவில்லை. மேலும்  இயக்குநர் செல்வராகவனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் 'என்ஜிகே' படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது . இதையடுத்து 'என்ஜிகே' படம் தீபாவளிக்கு வெளியாகாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கிறிஸ்துமஸ் அல்லது பொங்கல் சமயத்தில் படம் வெளியாகவுள்ளதாக தற்போது கூறப்படுகிறது. அதனால் தற்போது தனிஒருவனாக தீபாவளிக்கு களமிறங்குகிறான் சர்கார் இதனால் இந்த வருடம் தளபதியின் தீபாவளியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Read More about :

share