Kollywood News

  • Home/
  • Cine News/
  • தளபதி விஜய் மகன் சஞ்சயின் திரையுலக திட்டம்

தளபதி விஜய் மகன் சஞ்சயின் திரையுலக திட்டம்

தளபதி விஜய் பிறந்த நாள் நாளை அவரது ரசிகர்களால் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் விஜய் தனது குடும்பத்தினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடுவது வழக்கம். ஆனால் இந்த வருடம் தூத்துகுடி துப்பாக்கி சம்பவத்தின் சோகம் காரணமாக அவர் பிறந்த நாளை கொண்டாடப்போவதில்லை என்று கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் தளபதி விஜய்யின் மகன் சஞ்சயின் அடுத்தகட்ட திட்டம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகியுள்ளது. தற்போது சென்னையில் உள்ள அமெரிக்கன் இண்டர்நேஷனல் பள்ளியில் 12ஆம் வகுப்பை முடித்துள்ள சஞ்சய், அடுத்ததாக கனடா சென்று பிலிம் மேக்கிங் குறித்த உயர்படிப்பில் சேரவுள்ளதாக கூறப்படுகிறது.

பிலிம்மேக்கிங் படிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பும் சஞ்சய், தந்தையை போல் நடிகராவாரா? அல்லது இயக்குனர் போன்ற துறையில் ஈடுபடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Source : Indiaglitz

Read More about :

share