Kollywood News

  • Home/
  • Cine News/
  • விஜய்யின் ஓப்பனிங் பாடல் குறித்த முக்கிய தகவல்

விஜய்யின் ஓப்பனிங் பாடல் குறித்த முக்கிய தகவல்

தளபதி விஜய் நடிக்கும் படம் என்றாலே அதில் ஒரு மாஸ் ஓப்பனிங் பாடல் இருக்கும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது அவர் நடித்து வரும் 'சர்கார்' படத்திலும் ஒரு அட்டகாசமான ஓப்பனிங் பாடல் உள்ளதாம். இந்த பாடலின் படப்பிடிப்பு அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.

அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் என்ற பகுதியில் உள்ள இயற்கை வளம் கொஞ்சும் இடத்தில் விஜய்யின் ஒப்பனிங் பாடல் படமாக்கப்படவுள்ளதாகவும் இந்த பாடல் இதுவரை இல்லாத வகையில் பிரமாண்டமாக படமாக்க இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

'சர்கார்' படத்தில் விஜய் ஒரு தொழிலதிபராகவும், ராதாரவி ஒரு அரசியல்வாதியாக நடிக்கவுள்ளதாகவும், ஒரு தொழிலதிபருக்கும் அரசியல்வாதிக்கும் நடக்கும் மோதலே இந்த படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது.

விஜய், கீர்த்திசுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா உள்ளிட்டோர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ளது.


courtesy: Indiaglitz


share