Kollywood News

  • Home/
  • Cine News/
  • 'சர்கார்' படப்பிடிப்பை முடித்தார் தளபதி

'சர்கார்' படப்பிடிப்பை முடித்தார் தளபதி

தளபதி நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வந்த அரசியல் த்ரில் படமான 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடித்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே தளபதி தனது பகுதியின் டப்பிங் பணியை சமீபத்தில் முடித்துவிட்டதால், இந்த படத்தை பொருத்தவரையில் விஜய்யின் பணி முடிந்துவிட்டதாகவே கருதப்படுகிறது. 


வரும் தீபாவளி திருநாளில் வெளியாகவுள்ள 'சர்கார்' படத்தில் தளபதி விஜய், கீர்த்திசுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, ப்ழ கருப்பையா, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
 

Read More about :

share