Kollywood News

  • Home/
  • Cine News/
  • விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி “ரெக்க”!

விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி “ரெக்க”!


வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பத்தில் வல்லவர் விஜய் சேதுபதி. எந்த கதாபாத்திரத்தினை ஏற்று நடித்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி விடும் வல்லமை படைத்தவர்.

இவரது படங்கள் அடுத்தடுத்து வெளிவர தயார் நிலையில் உள்ளன. காதலும் கடந்து போகும், இறைவி, சேதுபதி, மெல்லிசை என நீள்கிறது இவரது பட்டியல். இந்நிலையில் காக்கா முட்டை படத்தினை இயக்கிய மணிகண்டனின் இயக்கத்தில் தற்போது ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

இதன் படப்பிடிப்பு முடிந்த கையோடு வா டீல் படத்தின் இயக்குனர் சிவ ஞானம் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். படத்திற்கு “ரெக்க” என தலைப்பு வைத்துள்ளனர்.

படத்தினை தயாரிக்கிறார் ஆரஞ்சு மிட்டாய் இயக்குனரும் விஜய் சேதுபதியின் நண்பருமான கணேஷ் பாலகிருஷ்ணன்.

share