டிரைக்டராக
வடிவம் எடுக்கும் பிரேம்குமாரின் 96 படத்தின் டீசர் பெரியளவில் பேசப்பட்டது இப்படத்தில்
விஜய்சேதுபதி பள்ளியில் படிக்கும் மாணவனாக நடிக்கிறார்.
"கடந்து
வந்த காலத்தை யோசிக்கும்போது அது கொடுக்கிற சந்தோஷமே தனி தானே. கடந்த காலத்தை யோசிக்கிற
கதைதான். நிகழ்காலத்துல தான்படம் தொடங்குது. ஒரே இரவுல நடக்கிற கதை. பல வருஷங்கள் கழிச்சி
ஹீரோ, ஹீரோயின் சந்திச்சியிருக்காங்க. அப்போ ஃப்ளாஷ்பேக்குல 1996ல தஞ்சாவூர் பள்ளியில
அவங்க படிச்சது காட்சிகளா விரியும். பள்ளியில்
படிக்கிறப்போ எல்லோருக்கும் ஒரு காதல் இருந்திருக்கும். 99 சதவீதம் அது தோல்வியில முடிஞ்சியிருக்கும்
ஆனாலும்
அந்த பள்ளி காதலை மறக்க முடியாது. பிளஸ் 2 படிக்கிறப்போ சேதுவுக்கும் திரிஷாவுக்கும்
இருந்த காதலைத்தான் அந்த பீரியட் ஃப்ளாஷ்பேக்குல சொல்றேன். அதுக்கு பிறகு அவங்களோட
திசை எப்படி மாறிப்போச்சு, இப்போ அவங்களோட கரென்ட் சூழல் என்ன, இனி என்ன நடக்கும்கிறதுதான் படம் என்று கூறியுள்ளார் இயக்குனர்.