Kollywood News

  • Home/
  • Cine News/
  • ரஜினியை எதிர்க்கும் விஜய்சேதுபதி

ரஜினியை எதிர்க்கும் விஜய்சேதுபதி

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் பேட்ட. இந்த படத்தில் ரஜினியுடன் சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, முனீஸ்காந்த், சோமசுந்தரம், சசிக்குமார், சனந்த் ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரஜினிக்கு முதன் முறையாக அனிருத் இசையமைத்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா தாம்பரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பிரம்மாண்டமாக நேற்று நடைபெற்றது. விழாவில் ரஜினிகாந்த், கலாநிதி மாறன், விஜய் சேதுபதி, திரிஷா, சிம்ரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

இதில் பேசிய விஜய் சேதுபதி, தான்தான் படத்தில் வில்லன் என்று உண்மையை கூறியுள்ளார். படத்தில் விஜய் சேதுபதியின் பெயர் ஜித்து என்று ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் வில்லன் என்ற விவரமும் வெளியாகி உள்ளது.

பெரிய ஆளை எதிர்த்தால்தான் பெரிய ஆள் ஆக முடியும். படத்தில் ரஜினியை நான்தான் எதிர்த்து இருக்கிறேன். அதனால் நான்தான் வில்லன் என்று கூறியுள்ளார்.

Read More about :

share