Kollywood News

  • Home/
  • Cine News/
  • சூர்யாவிற்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய்..???

சூர்யாவிற்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய்..???



சூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. 

குட்டிப்புலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் முத்தையா. முதல் படத்தில் வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களோடு கார்த்தியோடு ‘கொம்பன்’, விஷாலோடு ‘மருது’ என்று தொடர்ந்து வெற்றி படங்களை இயக்கினார். 

இதனை தொடர்ந்து தமக்காக ஒரு கதையை தயார் செய்யும் படி சூர்யா முத்தையாவை நெருங்கினார். இதனால், சூர்யாவிற்காக அவரது கம்பெனிக்காக கதையை உருவாக்கி வந்தார் முத்தையா. 

சில தினங்களுக்கு முன் இளைய தளபதியிடம் இருந்து முத்தையாவிற்கு அழைப்பு வர, தட தடவென்று விஜய்யை நேரில் பார்த்து முத்தையா கதையை கூற, விஜய்க்கு அந்த கதை பிடித்து விட்டதாம். உடனே ஓகே எனவும் கூறியுள்ளார் விஜய்.

இந்த செய்தி சூர்யாவின் செவிக்கு வர, டென்ஷன் ஆன சூர்யா முத்தையாவை கழட்டி விட தளபதிக்காக காத்திருக்கிறார் இயக்குநர்...

share