ஐடி ரெய்டால் விஜய் ஆண்டனியின் ‘அண்ணாதுரை’க்கு வந்த ஆபத்து!


எமன் படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி நடித்து வரும் படம் ‘அண்ணாதுரை’. படத்தினை சீனிவாசன் இயக்கி வருகிறார். ராடான் நிறுவனம் சார்பாக ராதிகா சரத்குமார் தயாரித்து வருகிறார்.

சமீபத்தில் ராடான் நிறுவனம் மீது வருமான வரித்துறையினரால் ரெய்டு நடத்தப்பட்டது. இதனால் படப்பிடிப்பு சில தினங்களாக நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கிருத்திகா உதயநிதி இயக்கும் ‘காளி’ படத்திற்கான வேலைகளை துவங்கியிருக்கிறார் விஜய் ஆண்டனி. 

 ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, விஜய் ஆண்டனியே இசையமைக்கிறார். அவருடைய ‘விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்’ நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. லொக்கேஷன் மற்றும் பிற நடிகர் – நடிகைகள் தேர்வில் மும்முரமாக இருக்கிறார் கிருத்திகா.

விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்கப்பட இருக்கிறது. 

அப்போ அண்ணாதுரை..??? 

share