Kollywood News

  • Home/
  • Cine News/
  • இவன்தான்யா மனுசன்.... கண்தானம் செய்தார் விஜய் சேதுபதி!

இவன்தான்யா மனுசன்.... கண்தானம் செய்தார் விஜய் சேதுபதி!



தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகனில் மிக முக்கியமான ஒருவர் தான் விஜய் சேதுபதி. நிஜ வாழ்க்கை என்னவோ, அதன்படி வாழ்பவர் விஜய் சேதுபதி. அதிக சம்பளம் கேட்பதோ, வெட்டி பந்தாவோ அவரிடம் கிடையாது. இயல்பாக பேசிப் பழகக்கூடிய மனிதர். மிகப்பெரிய ஹீரோ என்ற எந்த பில்டப்பும் வைத்துக்கொள்ள மாட்டார். திரையிலும் அப்படித்தான். 

ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்றில்லாமல், தனக்குப் பிடித்த எந்த கேரக்டராக இருந்தாலும், 100 சதவீதம் அதற்கு உண்மையாக நடித்துக் கொடுப்பார். 

அப்படிப்பட்டவர், மதுரையில் ஒரு கண் மருத்துவமனையைத் திறந்து வைத்ததோடு, தன் கண்களைத் தானம் செய்துள்ளார். அத்துடன், தன் ரசிகர்களும் ,ரசிகைகளும் கண் தானம் செய்ய முன்வர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

share