Kollywood News

  • Home/
  • Cine News/
  • மலையாள படங்களில் களம் இறங்கும் மக்கள்செல்வன் விஜய்சேதுபதி

மலையாள படங்களில் களம் இறங்கும் மக்கள்செல்வன் விஜய்சேதுபதி

விஜய்சேதுபதி அழுத்தமான கதைகளில் நடிக்கிறார். போலீஸ், தாதா, வில்லன், திருநங்கையை என்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார், சமீபத்தில் திரைக்கு வந்து சீதக்காதி படத்தில் வயதான நாடக நடிகராகவும் நடித்து இருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் க்கு வில்லனாக பேட்ட படத்தில் நடிக்கிறார்.

பேட்ட இசை வெளியீட்டு விழாவில் விஜய்சேதுபதி திறமையான நடிகர் என்று ரஜினி பாராட்டினார் இந்தவருடம் விஜய்சேதுபதி ஆக்ட்டிங் ஜூங்கா, செக்கச்சிவந்தவனம் , 96, சீதக்காதி, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், இமைக்கா நொடிகள், ஆகிய படங்கள் வந்துள்ளன. 

இதைத்தொடர்ந்து தெலுங்கில் சீரஞ்சிவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி என்ற படத்தில் நடிக்கிறார். அதிக செலவில் சரித்திர படமாக இது தயாராகிறது. அடுத்த மலையாள படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகிறார். இந்த படத்தில் ஜெயராம் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு இணையான வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். சுனில் இயக்கத்தில் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்குகிறது.

Read More about :

share