Kollywood News

  • Home/
  • Cine News/
  • விஜய் சேதுபதியுடன் கைகோர்க்கிறார் கெளதம் கார்த்திக்...

விஜய் சேதுபதியுடன் கைகோர்க்கிறார் கெளதம் கார்த்திக்...


தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி. தனது கால்ஷீட்டை எப்போதும் பிஸியாகவே வைத்து வரும் ஒரே நடிகர் விஜய் சேதுபதி மட்டுமே.

தற்போது இவர் வேதா, கருப்பன், கவண் என மூன்று படங்களில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். இந்த படங்களை தொடர்ந்து அறிமுக இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய் சேதுபதி. 

விஜய் சேதுபதியோடு முதல் முறையாக கைகோர்க்கவிருக்கிறார் கெளதம் கார்த்திக். ஒரு மாணவனுக்கும் பழங்குடி இனத் தலைவருக்கும் நடக்கும் பிரச்சனை தான் படத்தின் கதை என்று கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும் என தெரிகிறது... 

share