Kollywood News

  • Home/
  • Cine News/
  • விஷ்ணு விஷால், விக்ராந்த் இணையும் புதிய படத்தில் விஜய் சேதுபதி:

விஷ்ணு விஷால், விக்ராந்த் இணையும் புதிய படத்தில் விஜய் சேதுபதி:

விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் படத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி திரைக்கதை வசனம் எழுதுகிறார்.

விக்ராந்த் ஹீரோவாக நடித்து கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான படம் 'தாக்க தாக்க'. இந்தப் படத்தை விக்ராந்தின் சகோதரர் சஞ்ஜீவ் இயக்கியிருந்தார். இவர் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷாலை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இந்தப் படத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி வசனம் எழுத்தவுள்ளார். ஆரஞ்சு மிட்டாய் படத்துக்கு ஏற்கெனவே விஜய் சேதுபதி வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கிறது.

விக்ராந்துடன் இணையவிருக்கும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று விஷ்ணு விஷால் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

share