Kollywood News

  • Home/
  • Cine News/
  • மீண்டும் சவாலான கதாபாத்திரத்திற்கு தயாரான விஜய் சேதுபதி...

மீண்டும் சவாலான கதாபாத்திரத்திற்கு தயாரான விஜய் சேதுபதி...



தர்மதுரை படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கே வி ஆனந்த் இயக்கத்தில் நடிகக்விருக்கிறார். இந்த படத்தில் டி ராஜேந்தர் அவர்களும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கவிருக்கிறார்.

தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை பற்றி கவலைப்படாமல் எந்த ஒரு ரோலையும் ஏற்று நடிக்கக் கூடிய ஒரே நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் தான்.

இயக்குனர் ஜனநாதன் இயக்கத்தில் உருவான புறம்போக்கு என்ற படத்தில் ஒரு சவாலான கதாபாத்திரம் ஏற்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் விஜய் சேதுபதி.

அதே போல் கே வி ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திலும் ஒரு வித்தியாசமான, சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கவிருக்கிறார் விஜய் சேதுபதி.

துப்புரவு தொழிலாளியாக இந்த படத்தில் தோன்றவிருகிறார் விஜய் சேதுபதி. 

share