Kollywood News

  • Home/
  • Cine News/
  • விஜய் சேதுபதிக்காக இணைந்த இளையராஜா குடும்பம்...

விஜய் சேதுபதிக்காக இணைந்த இளையராஜா குடும்பம்...



விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான தர்மதுரை மிகப்பெரிய வெற்றிபடமாக அமைந்தது. 

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற அப்படத்தை தொடர்ந்து, தொடர்ந்து விஜய் சேதுபதி - சீனு ராமசாமி ‘மாமனிதன்’ படத்தின் மூலம் இணைந்திருக்கின்றனர். 

தென்மாவட்டத்தில் வாழ்ந்த ஒரு பிரபல மனிதனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து உருவாக இருக்கும் இந்த படத்திற்கு இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா என மூன்று பேரும் இணைந்து இசையமைக்க இருப்பதாக யுவன் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இளையராஜா குடும்பத்தில் உள்ள இசையமைப்பாளர்கள் மூன்று பேரும் ஒரே படத்திற்கு இசையமைப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் மூலம் தயாரிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.   

share