Kollywood News

  • Home/
  • Cine News/
  • விஜய் சேதுபதியோடு டூயட் பாடப்போகும் சிம்பு நாயகி...

விஜய் சேதுபதியோடு டூயட் பாடப்போகும் சிம்பு நாயகி...



இந்த ஆண்டில் மட்டும் இதுவரை சுமார் ஆறு படங்களை வெளியிட்டு அதில் வெற்றியும் கண்டுள்ளார் விஜய் சேதுபதி. தற்போது இவர் கே வி ஆனந்த் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். 

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் டி ராஜேந்தர். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா செபஸ்டின் நடித்து வருகிறார். இந்த படத்தினை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த படத்தை இயக்குகிறார் பன்னீர் செல்வம்.

இவர் ஏற்கனவே ரேணிகுண்டா என்ற படத்தினை இயக்கியவர். அஜித் பட தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் இந்த படத்தினை தயாரிக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக முதலில் கீர்த்தி சுரேஷிடம் பேசப்பட்டது. ஆனால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக இந்த வாய்ப்பு தற்போது மஞ்சிமா மோகனிடம் சென்றுள்ளது. 

இவர் தற்போது சிம்பு நடிப்பில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது..

share