Kollywood News

  • Home/
  • Cine News/
  • விஜய்சேதுபதியின் அடுத்த படத்திலும் இவரே இசையமைப்பாளர்....

விஜய்சேதுபதியின் அடுத்த படத்திலும் இவரே இசையமைப்பாளர்....


‘றெக்க’ படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி தற்போது வட சென்னை மற்றும் கே வி ஆனந்த்ம் இயக்கத்தில் ஒரு படம் என மிகவும் பிஸியாக இருக்கிறார். வட சென்னையில் விஜய் சேதுபதி தான் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவலும் வெளிவந்து கொண்டிருக்கிறது.

இந்த இரு படங்களுக்கு பிறகு விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த படத்தை இயக்குகிறார் பன்னீர் செல்வம். இவர் ஏற்கனவே ரேனிகுண்டா என்ற படத்தினை இயக்கியுள்ளார்.

இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் தான் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த படத்திற்கும் விஜய் சேதுபதியின் ஆஸ்தான இசையமைப்பாளரான டி இமான் அவர்களே இசையமைக்கவிருக்கிறாராம்.

இந்த படத்தினை அஜித்தின் இயக்குனர் என்று அழைக்கப்படும் ஏ எம் ரத்னம் அவர்களே தயாரிக்கவிருக்கிறார்...

share