Kollywood News

  • Home/
  • Cine News/
  • நானே எனது திறமையை கண்டுபிடித்தேன் - விஜய் சேதுபதி!

நானே எனது திறமையை கண்டுபிடித்தேன் - விஜய் சேதுபதி!


சென்னையில் நேற்று சிறந்த நடிகர்களுக்கான Ritz Style Award வழங்கப்பட்டது. இதில் விஜய் சேதுபதி கலந்து கொண்டார். அவருக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. விருதினை பெற்றுக் கொண்டு பேசிய விஜய் சேதுபதி,” இந்த வருடத்தில் நான் வாங்கும் முதல் விருது இது தான். எதுக்காக இந்த விருது கொடுக்றாங்கன்னு எனக்கு சத்தியமா தெரியல. இருந்தாலும் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.

எனக்கும் பணம் சம்பாதிக்கனும், பிசினஸ் ஆரம்பிச்சா முதலீடு வேணும், அது இல்லை. ஹீரோவுக்கு முயற்சி செய்தேன். அதில் வெற்றியும் பெற்றேன். எனக்குள்ள திறமை இருக்குன்னு நானே கண்டுபிடிச்சேன். நான் எந்தவொரு இயக்குனரையும், ஹீரோவையும் நம்பி இல்லை. எனக்குள்ள திறமை இருக்கு, நான் யார்கிட்ட வேணும்னாலும் வேலை பார்ப்பேன்.

என் தொழிலை நான் ஒழுங்கா கத்துக்கணும். அது போதும் எனக்கு.” என்று கூறினார்.

share