Kollywood News

  • Home/
  • Cine News/
  • சாதனையை துவக்கிய விஜய் சேதுபதி.. முதலில் சத்யம் திரையரங்கில்...!!

சாதனையை துவக்கிய விஜய் சேதுபதி.. முதலில் சத்யம் திரையரங்கில்...!!



பல நடிகர்கள் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுப்பதே சிரமமாக இருக்கும் இந்த வேளையில் ஒரே வருடத்தில் ஐந்து படங்கள் கொடுக்கும் நடிகர் விஜய் சேதுபதி. மேலும், ஆறாவதாக ஒரு படத்தினையும் இந்த வருடத்தில் கொடுக்கவிருக்கிறார் விஜய் சேதுபதி.

இந்த வருடத்தில் சேதுபதி, காதலும் கடந்து போகும், இறைவி, தர்மதுரை, ஆண்டவன் கட்டளை படங்கள் வெளியாகியுள்ளன. இதில் எந்த படங்களுமே தோல்வி லிஸ்டில் சேராமல் அனைத்து படங்களும் வெற்றியடைந்துள்ளன.

மேலும், வரும் வெள்ளிக்கிழமை ரத்தின சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘றெக்க’ படமும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், சத்யம் திரையரங்கில் ஏற்கனவே விஜய் சேதுபதி நடிப்பில் உருவான தர்மதுரை மற்றும் ஆண்டவன் கட்டளை இரு படங்களும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் வேளையில் வெள்ளி முதல் ‘றெக்க’ படமும் திரையிடப்படுகிறது.

இதனால் சத்யம் திரையரங்கில் ஒரே நடிகர் நடித்த மூன்று படங்கள் ஒரே சமயத்தில் திரையிடப்படௌவது இது தான் முதல் முறை ஆகும். இதன் மூலம் தனது சாதனை பயணத்தை இதிலிருந்து ஆரம்பித்துள்ளார் விஜய் சேதுபதி.

share