பிரபலம் ஒருவரின் உண்மைக் கதையில் விஜய் சேதுபதி!


சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் படம் ‘மாமனிதன்’. இவர்கள் இருவரும் இணையும் நான்காவது படம் இது. இந்தப் படத்தின் கதை, தென் தமிழ்நாட்டில் வாழ்ந்த ஒருவரின் வாழ்க்கை வரலாறு என்று சொல்லப்படுகிறது. அதுவும், எல்லோருக்கும் தெரிந்த ஒருவரின் வாழ்க்கை வரலாற்றைத்தான் கதையாக எழுதியிருக்கிறார் சீனு ராமசாமி என்கிறார்கள். 

மொத்தக் கதையையும் எழுதி முடித்துவிட்ட சீனு ராமசாமி, விஜய் சேதுபதியின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கிறார். இந்தப் படத்துக்கு முன் ஒப்புக்கொண்ட படங்களில் பிஸியாக இருக்கும் விஜய் சேதுபதி, அவற்றை முடித்துக் கொடுத்ததும் இந்தப் படத்தில் நடிக்கிறார். கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை, யுவன் சங்கர் ராஜா தயாரிக்கிறார்.

share