Kollywood News

  • Home/
  • Cine News/
  • சூப்பர்ஸ்டார் போல் நடித்துக்காட்ட முடியவில்லை மனஅழுத்தத்துடன் : மக்கள்செல்வன்

சூப்பர்ஸ்டார் போல் நடித்துக்காட்ட முடியவில்லை மனஅழுத்தத்துடன் : மக்கள்செல்வன்

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் வரும் பொங்கல் அன்று வெளியாக இருக்கும் படம் பேட்ட, இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக விஜய்சேதுபதி மற்றும் நவாஸுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ் எனப் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர் அனிருத் இசையமைத்துள்ளார். 

பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட படக்குழுவிடம், ரஜினி படங்களில் பேசிய வசனம் எதையாவது பேசும்படி கேட்கப்பட்டது.

அதற்கு விஜய் சேதுபதி மறுத்துவிட்டார். “எனக்கு வராததை நான் எப்படிச் செய்ய முடியும்? கூத்துப்பட்டறைக்கு நான் முதன்முதலில் சென்றபோது, ஒருவர் என்னை மிமிக்ரி முயற்சிக்கச் சொன்னார்.

நடிக்க விரும்பும் எல்லாரும் சூப்பர்ஸ்டார் போல நடித்துக் காட்டுவார்கள். அதுகூட எனக்கு வராது என்று நான் அவரிடம் சொன்னேன். 

அந்தக் காலகட்டத்தில் மன அழுத்தத்தில் இருந்தேன். சூப்பர் ஸ்டார் போல நடித்துக்காட்டக் கூட முடியவில்லையே.. நான் என்றாவது நடிகனாவேனா என்றெல்லாம் யோசித்திருக்கிறேன்” என்று கூறினார் விஜய் சேதுபதி.

Read More about :

share