Kollywood News

  • Home/
  • Cine News/
  • பிரம்மாண்ட பொருட்செலவில் விக்ரம் நடிக்கும் ’மஹாவீர் கர்ணா’!

பிரம்மாண்ட பொருட்செலவில் விக்ரம் நடிக்கும் ’மஹாவீர் கர்ணா’!



விக்ரம் தற்போது ஹரி இயக்கத்தில் `சாமி படத்தின் இரண்டாம் பாகத்திலும், கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்' படத்திலும் பிசியாக நடித்து வருகிறார். 

இவ்விரு படங்களுக்குப் பிறகு விக்ரம் அடுத்ததாக `தூங்காவனம்' இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், விக்ரம் அடுத்ததாக ஆர்.எஸ்.விமல் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த படத்திற்கு `மஹாவீர் கர்ணா' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரம் கர்ணனாக நடிக்கிறார். தமிழ் மற்றும் இந்தி என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை நியூயார்க்கை சேர்ந்த யுனிடெட் பிலிம் கிங்டம் என்ற தயாரிப்பு நிறுவனம் ரூ. 300 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கிறது. 

வருகிற அக்டோபரில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. உலகின் பிரபல தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்தில் பணிபுரிய இருக்கின்றனர். தற்போது இந்தி பதிப்பிற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த படம் 2019ம் ஆண்டு திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது 

share