Kollywood News

  • Home/
  • Cine News/
  • விக்ரம் பிரபு அடுத்த படத்தின் தலைப்பு ''வானம் கொட்டட்டும்''

விக்ரம் பிரபு அடுத்த படத்தின் தலைப்பு ''வானம் கொட்டட்டும்''

மணிரத்னமிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த தனசேகரன் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கிறார். மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணிரத்னம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘வானம் கொட்டட்டும்’ என்று தலைப்பு வைத்துள்ளார்கள்.

இதில் சரத்குமாரும், அவருடைய மனைவி ராதிகா சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்தில் இருவரும் கணவன் - மனைவியாகவே நடிக்க இருக்கிறார்கள். விக்ரம் பிரபு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் தொடங்கி சென்னை, மதுரை உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் நடைபெற இருக்கிறது. .

share